Naan Kadanthu Vantha – Viyasar Lawrance – Tamil Christian Song

Tamil

நான் கடந்து வந்த பாதையிலெல்லாம்
என்னை சுமந்து வந்த நேசர் இயேசுவே
கடந்த கால பாவங்களெல்லாம் – கொடும்
குருசில் சுமந்து தீர்த்த நேசரே

தாயாரின் வயிற்றில் உருவானமுதல் – எனை
தமக்காக தெரிந்து கொண்டு பிரித்தெடுத்தீர்
ஒரு தகப்பனை போல் – எனை சுமந்தவரை
தினம் தழுவிடுவேன் – சிறு பிள்ளையைப் போல்
மார்போடு அணைத்தவரை பாடிடுவேன் – முழு
மனதோடு சேர்ந்தவரை துதித்திடுவேன்

வழிமாறி ஓடி ஒரு ஓடத்திலே – கொஞ்சம்
இளைப்பாற நினைத்தேன் அடிதளத்தினிலே
வலக்கரம் கொடுத்து எனை எடுத்து
மீன் வயிற்றினிலும் தனி இடங்கொடுத்து
அழியாது காத்தவரைப் பாடிடுவேன்
விலகாது மீட்டவரைத் துதித்திடுவேன்

வெகுதூரம் நடந்தே ஒரு மலையருகில் – நான்
களைப்பாற சாய்ந்தேன் சூரைச் செடி நிழலில்
இரு வேளையிலும் கரும் காகம் கொண்டு
சுவை கறியுடனே தினம் அப்பம் கொடுத்து
புசி தாகம் தீர்த்தவரை பாடிடுவேன் – எனக்கு
இளைப்பாறுதல் ஈந்தவரை துதித்திடுவேன்

naan kadanthu vantha pathaigal ellam naan nadanthu vantha pathaigal ellam ennai lyrics naan nadanthu vantha pathaigal ellam lyrics in tamil vyasar lawrence songs lyrics

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *